துலாம்

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: தன குடும்பாதிபதி செவ்வாய் பாக்கியத்தில் இருப்பதால் உயர்கல்வி மற்றும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் உண்டு. தொலைதூரப் பயணங்களில் நன்மை கிடைக்கும். 10ல் புதன் சூரியன் குரு இணைவு இருப்பதால் புதிய கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. புது முயற்சிகள் பலனளிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்பு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். 6ல் சனி அனுகூலமான பலன் தரும். ஆன்மிக அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் உருவாகும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல செய்திகள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கும்.

கவனம்தேவை: உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் பொறுமை அவசியம். பணிகளைத் தள்ளிப்போட வேண்டாம்.குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் சில நேரங்களில் அனுசரணையோடு சகிப்புத்தன்மையோடு பொறுமையாக நடக்க வேண்டும். அப்போதுதான் காரியம் ஆகும். பண விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும். வீடு கட்டும் பணி, நிலம் வாங்குதல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 7.8.2026 காலை 1.54 முதல் 9.8.2026 காலை 3.49 வரை சந்திராஷ்டமம் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லுங்கள்.