கடகம்

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: செவ்வாய் 12ல் இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளில் நன்மை கிடைக்கும். பழைய பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். குரு உச்சம் என்பதால் மரியாதை, புகழ் உயரும்.புதிய வாய்ப்புகள் தேடி வரும். உடல்நலம் மேம்படும். கல்வி, அரசு, நிர்வாகத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் உச்ச குருவுடன் சூரியன் இணைந்திருப்பது மிகச் சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. மதிப்பு, மரியாதை, பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் ராசிக்கு இரண்டில் இருப்பதால் கவர்ச்சியும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

கவனம்தேவை: மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. அகங்காரம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வேலைப்பளு அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கண் மற்றும் வயிறு தொடர்பான சிறிய உடல்நலக் குறைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

சந்திராஷ்டமம் : 31.7.2026 காலை 6.38 முதல் 2.8.2026 பிற்பகல் 3.27 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.