(1.8.2026 முதல் 7.8.2026 வரை)
சாதகங்கள்: லாபாதிபதி செவ்வாய் ராசியில் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். தலைமைப் பொறுப் புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நட்புகள் பயனளிக்கும். குழந்தை இல்லாத தம்பதியற்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.
கவனம் தேவை: அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். கோபம் காரணமாக நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிறிய காயங்கள் ஏற்பட வாய்ப்பு. தேவையற்ற ஆடம்பரச் செலவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானம் அவசியம். கண், பல் தொடர்பான சிறு பிரச்னைகள் வரலாம். ரகசிய விஷயங்களை எல்லோரிடமும் பகிர வேண்டாம். பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். வாக்குறுதி கொடுப்பதில் சிந்தித்து செயல்படுங்கள்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
