(1.8.2026 முதல் 7.8.2026 வரை)
சாதகங்கள்: செவ்வாய் 2ல் இருப்பதால் வருமானம் உயர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சால் காரிய சாதனை உண்டாகும். பேச்சாற்றலால் காரிய வெற்றி.குறுகிய பயணங்கள் நன்மை தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குருவின் பார்வை நிதிநிலையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். முக்கியஸ்தர்கள் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.
கவனம் தேவை: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.உணவு விஷயத்தில் கவனம் தேவை. கண் அல்லது பல் தொடர்பான சிறு தொந்தரவுகள் வரலாம். அவசரப் பேச்சால் சிறு மனக்கசப்பு ஏற்படலாம்.வாகனப் பயணங்களில் கவனம் தேவை. அதிக வேலைப்பளு சோர்வை உண்டாக்கும். உடல் சூடு தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்தவும். தேவையற்ற முதலீடுகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: முருகன் வழிபாடு சிறப்பு தரும்.
