சென்னை: வேளச்சேரியில் பட்டப்பகலில் 4 வயது குழந்தையை காரில் கடத்தியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ். காலனியை சேர்ந்த சாந்தி என்பவரை வழிமறித்து அவரது பேத்தியை மர்மநபர்கள் காரில் கடத்தினர். பேத்தி அட்சயாவை சைக்கிளில் அழைத்து சென்றபோது, 4 பேர் கும்பல் குழந்தையை பறித்துச் சென்றதாக புகார் தெரிவித்துள்ளனர். சாந்தி அளித்த புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
