தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் கடந்த 10ம் தேதி 16 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்தாள். இதனை அறிந்த அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளான்.
சிறுமி கதவை திறந்தவுடன் வீட்டிற்குள் தள்ளிய சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்ட நிலையில், சிறுவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாள். அவர்கள் சிறுமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். மேலும், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்த மையத்தில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
