சி.பி.எஸ்.இயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை

 

புதுடெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் ‘மும்மொழி வழிக்கொள்கை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,\”வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை விதியால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பமும் மன உளைச்சலும் ஏற்படும். 3வது மொழி படிக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.

குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் திடீரென மேலும் இரண்டு கூடுதல் மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறுவது மாணவர்களின் கல்விச் சுமையை அநியாயமாக அதிகரிக்கும் செயல் ஆகும். ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், அடுத்த ஆண்டே 10ம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், திடீரென கூடுதல் மொழிகளைப் படிக்கக் கட்டாயப்படுத்துவது கல்விச் சூழலில் மிகப்பெரிய குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும்.

இந்த பிரச்னை என்பது முகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், மாணவர்களின் எதிர்காலம் பற்றியது என்பதாலும் மனுவை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த முறையீட்டை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்வைத்தார். இதைத்தொடர்ந்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், தலைமையிலான அமர்வு, சி.பி.எஸ்.இயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அவசர வழக்காக அடுத்த வாரம் பட்டியலிட்டு விசாரணை நடத்துவதாக உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: