நீட் கேள்வித்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியை கைது

 

புதுடெல்லி: நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் இயற்பியல் வினாத்தாளை கசிய விட்ட புனே பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் நேற்று கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் கேள்வித்தாள் வெளியானதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. டெல்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே, லத்தூர் மற்றும் அஹல்யநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 11 குற்றவாளிகள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நீட் இயற்பியல் வினாத்தாளை, குறிப்பிட்ட சில தேர்வர்களுக்குக் கசியவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புனேவைச் சேர்ந்த பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தாா் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது புனேயில் உள்ள ‘சேத் ஹிராலால் சரஃப் பிரஷாலா’ பள்ளியில் பணியாற்றி வரும் மனிஷா சஞ்சய் ஹவல்டார், ஏற்கனவே கைது செய்யப்பட்ட புனேயை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் மனிஷா மந்தாரேவுக்கு இயற்பியல் கேள்வித்தாளை பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: