ம.பி.யில் வரதட்சணை கொடுமை: மனைவி தற்கொலை வழக்கில் பெண் நீதிபதியின் மகன் சரண்

 

ஜபல்பூர்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் கட்டாரா ஹில்ஸ் பகுதியில் கடந்த 12ம் தேதி ட்விஷா சர்மா(33) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் பெற்றோர் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் டிவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான அவரது தாயார் கிரிபாலா சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவான சமர்த் சிங்கை கைது செய்வதற்கு உதவுவோருக்கு போலீசார் ரூ.30ஆயிரம் சன்மானம் அறிவித்து இருந்தனர். பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்நிலையில் 10 நாட்கள் தலைமறைவாக இருந்த ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மத்தியப்பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் அவர் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர். இதனிடையே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத சமர்த் சிங் தாயாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான அவரது தாயாரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டது.

* 2வது பிரேத பரிசோதனைக்கு அனுமதி

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் ட்விஷா சர்மாவின் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு நிபுணர் குழு மூலமாக இரண்டாவது பிரேத சோதனை செய்வதற்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: