எஸ்பிஜி நிர்வாக தலைவராக மணிப்பூர் டிஜிபி நியமனம்

 

புதுடெல்லி: அமைச்சரவைச் செயலகத்தின் பாதுகாப்புச் செயலாளராக மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் நியமிக்கப்பட்டார். பிரதமருக்கும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவருடன் வசிக்கும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ‘சிறப்புப் பாதுகாப்புப் படையின்’ (எஸ்பிஜி) நிர்வாகத் தலைவராக அவர் செயல்படுவார். திரிபுரா பிரிவைச் சேர்ந்த, 1993ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் சிங், 2023 ஜூன் 1 முதல் மணிப்பூர் டிஜிபியாக உள்ளார். ரா தலைவரான பராக் ஜெயின், கடந்த ஆண்டு நவம்பர் 12 முதல் பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கான கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது மணிப்பூர் டிஜிபி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

லடாக் டிஜிபி மணிப்பூருக்கு மாற்றம்: இதையடுத்து லடாக் டிஜிபி முகேஷ்சிங் தற்போது மணிப்பூர் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அருணாச்சல், கோவா, மிசோரம் பகுதியை சேர்ந்த 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவரை 3 ஆண்டுகளுக்கு மணிப்பூர் டிஜிபியாக மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Related Stories: