புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சுமார் 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் கேபினட் அமைச்சர்கள், ராஜாங்க இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர்களை கேட்டு கொண்டார்.
மக்களின் வாழ்வில் வசதியையும், வாழ்க்கையை எளிமையானதாக மாற்றம் ஏற்படுத்துவதே தங்களின் குறிக்கோளாகவும் குறிக்கோளாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.மக்களின் வாழ்வில் எந்த வகையிலும் தலையீடு இருக்கக்கூடாது. அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களைப் பெறும் வகையில், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சர்களிடம் மோடி கூறினார் என தெரிவித்தன.இது குறித்து பிரதமர் மோடி நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,அமைச்சரவைக் கூட்டம் பயனுள்ளதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
