மதுரை: கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக் கலைஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது. ஆண்களுக்கு பைஜாமா அல்லது வேட்டி, சட்டை மற்றும் பெண்களுக்கு சேலை, தாவணி அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவு. குழந்தைகள் முழு உடலையும் மறைக்கும் வகையில் உடை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
