பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு: சங்க செயலாளர் சஸ்பெண்ட்

 

திண்டுக்கல்: பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு செய்த கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேலு. இவர் தனது பணிக்காலத்தின்போது 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடியில் ரூ.83 லட்சம் அளவிற்கு முறைகேடு புரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து திண்டுக்கல் மண்டல இணை பதிவாளர் ஆணையின்படி சண்முகவேலு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: