முதுநிலை சட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

 

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 13.7.2026 என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 17.7.2026 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.t*dalu.ac.i* என்ற பக்கத்திற்கு சென்று ஜூலை 17ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Related Stories: