சென்னை : தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கிளெப்சில்லா நிமோனியா பாக்டீரியா மற்றும் கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன.
கடுமையான கிளெப்சில்லா நிமோனியா தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் கடந்த மாதம் 28ம் தேதி அவர் உயிரிழந்தார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயை தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் கொரோனா ஒரு தற்செயலான (I*cide*tal fi*di*g) கண்டறிதலாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் வழக்கமாக அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும் மற்றும் தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கு வழக்கமாக கோவிட் தொற்று பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில், 2026ம் ஆண்டில் 335 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 2,575 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; நோய்த் தொற்று பரவல் (Outbreak) காரணமாக ஏற்பட்டவை அல்ல.
இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம் (*IV), புனேயில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான நோய் வெளிப்பாட்டை கொண்டதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான (Low Commu*ity Tra*smissio*) பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் இருமல்/தும்மல் ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் போன்ற பொது சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
