தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி;

  1.  முன்னாள் முதல்வரின் தனிச் செயலராக இருந்த உமாநாத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  2. சென்னை கால்நடை பராமரிப்பு & மருத்துவச் சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுண்ணி நியமிக்கப்பட்டுள்ளார்
  3. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  4. தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக அம்ரித் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாச்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி.மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: