சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வரை 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளுக்கு முன்பு மரங்கள் நடவும் மேற்கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பெண்கள் அதிக அளவில் வருவதால் ரேஷன் கடைகளுக்கு முன்பு மரம் நடவும் நிரந்தர மேற்கூரை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி பதில் appeared first on Dinakaran.