புதிய தமிழகம் கட்சி ஜனவரி 7ம் தேதி மதுரையில் மாநில மாநாடு: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது, கூட்டணி தொடர்பாக மாநாடு முடிந்த பிறகு நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும். புதிய தமிழகம் கட்சி இன்னும் கூட்டணி முடிவு செய்யவில்லை. மாநாடு முடிந்த பிறகு இதை பற்றி எல்லாம் பேச முடியும். மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு கிடையாது. தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பொறுத்து புதிய தமிழகம் கட்சி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: