ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது;

பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையாக தலா ரூ.3000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

அத்துடன், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கும் பரிசுத் தொகுப்பும், தொகையும் வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: