சென்னை: இளநிலைகியூட் நுழைவுத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில்(க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 11 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஜனவரி 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 31ம் தேதி கடைசி நாளாகும்.
