இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கலைமகள் சபாவில் முதலீடு செய்த சுமார் 6 லட்சம் பேர் பல ஆண்டுகளாக பணத்துக்காக காத்திருக்கின்றனர். சுமார் 3 ஆயிரத்து 88 சொத்துக்கள் இந்த சபாவுக்கு உள்ளன. இதுவரை இந்த சொத்துக்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களின் அடையாளம் காணும் பொறுப்பை 33 மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்கிறோம். இதற்காக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்ட கலெக்டர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். கலைமகள் சபா பெயரில் உள்ள சொத்து விவரங்களை இந்த கலெக்டர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களை பெற்றுக் கொண்டு சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அளவீடு செய்து அறிக்கை தருவதற்காக தாசில்தார் ஒருவரை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நியமித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.
The post முதலீடு மோசடியில் சிக்கிய கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிந்து அளவீடு: 33 கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
