ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு டிஸம்பர் 26ம் தேதி செவ்வாய்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.6 ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 6ம் தேதி அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், டிச.26ம் தேதி செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: