ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு

ஸ்ரீபெரும்புத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீவளூர், மேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் டவுன் ஆகிய பகுதிகளில் செயல்படக்கூடிய கடைகளில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன், போலீசாரும் கடை கடையாக சென்று சோதனை மேற்கொண்டனர். 2 நாட்களாக நடத்திய இந்த சோதனையில் சுமார் 13 கடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லீப் போன்ற போதை பொருட்கள், இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, சுமார் 150 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை கைப்பற்றிய போலீசார், இந்த விற்பனை தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் பட்சத்தில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: