சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மதுராந்தகம்: சிலாவட்டம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு அரசு நீர்வள துறை உருவாக்கி மழை நீரை தேக்கி வைக்க புதிதாக ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களை உருவாக்கி வருகிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சியில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் புதிதாக 25 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்ட புதிய குளம் வெட்டும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமாக ரூ.3.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில், தினமும் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குளம் வெட்டும் பணியில் அப்பகுதி ஊராட்சி சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து பயனடைகின்றனர். மேலும் இந்தக் குளம் வெட்டி முடித்தவுடன் இந்த குளத்தின் அருகில் உள்ள நான்கு ஏக்கர் பரப்பளவில் மரங்கள் நட்டு புதிய குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி மரங்களை வளர்க்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி பாலு, ஊராட்சி செயலர் ராஜசேகர் ஆகியோர் மேற்பார்வையில் குளம் வெட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

The post சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம் appeared first on Dinakaran.

Related Stories: