ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஊத்துக்கோட்டை: 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு 3 குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றியது. நேற்று முதல் அந்த சட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன. இதை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்க்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

எனவே வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், ராஜசேகரன், பிஎம்.சாமி, சீனிவாசன், இளங்கோவன், பார்த்திபன், வெற்றி தமிழன், பாலசுப்பிரமணிய குமார், சாந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: