எல்லை தாண்டிய பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி பெரி பதான் பகுதிக்குள் டிரோன் நுழைந்தது. இதனை பார்த்து உஷாரான வீரர்கள் டிரோன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். டிரோனில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post எல்லை தாண்டிய பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: