கலெக்டர் அலுவலகத்தில் மனு போதிய மழை இல்லாததால் வேளாண். பணிகள் பாதிப்பு

கரூர், நவ. 3: கரூர் மாவட்டத்தில் போதிய மழையின்மை காரணமாக விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் தளவாப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலை பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனம் நடைபெறுகிறது. இதே போல் ராஜபுரம், சின்னதாராபுரம், விசுவநாதபுரி, செட்டிபாளையம், புலியூர் பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனம் நடைபெறுகிறது. ஆனால் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மழையை எதிர்நோக்கித்தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை காலமான ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பெய்தது. இதனை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகள் சோளம் போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் இதுநாள் வரை கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மழை வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பிற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஒரளவு பெய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மழை துவங்காமல் உள்ளதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

Related Stories: