கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது

கரூர், ஏப்.28: கரூரில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியுள்ளது. கரூர் விவசாயிகள் எள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உலக அளவில் எல்லா மக்களும் உடல் நலத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் இந்தியர்கள் தற்போது நல்ல தரமான உணவுகளை சாப்பிட்டு மேல் நாடுகளுக்கு முன் உதாரணமாக செயல்படுகின்றனர். பழைய பழமொழியில் கூட இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் எள் சாகுபடியில் தனிக் கவனம் செலுத்த வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தமட்டிலும் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும். அனைத்து மண்ணிலும் எள் வளரும் என்றாலும் வண்டலும், செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவுசெய்து மண்ணை கலைத்து விடவேண்டும். எள் இரண்டு வகையாக வகையாக வகைப்படுத்தப்படுகிறது. கருப்பு எள், மற்றொன்று வெள்ளை எள். எள் சாகுபடி செய்து 90 முதல் 120 நாட்கள் பின் பயன் தரக்கூடியது. 100 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் முதன்மையான உணவாக கருதப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் எள் சாகுபடி செய்தில் விருப்பப்பட்டு செயல்படுவதால் மாவட்டத்தில்300 க்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் உள்ள பெரியோர்கள் இன்றும் தினசரி பத்து மில்லி அளவிற்கு நல்லெண்ணையை குடிக்கும் பழக்கம் வைத்துள்ளனர். எள் மானாவாரி பயிராகவும், சொட்டுநீர் மூலமாகவும் நேரடியாக நீர் பாய்ச்சியும் பயிர் செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.190 முதல் 220 வரை விற்பனை செய்யப்படுவதால் நல்ல லாபம் கிடைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் மானவாரியாக எள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, தோகைமலை, பாலவிடுதி, கே.பரமத்தி தொழில் பேட்டை, ஜெகதாபி ஆகிய பகுதிகள் விவசாயிகள் சிறிய அளவில் மானாவாரியாகவும் மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் பயிர் செய்கின்றனர்.

எள் பயிருக்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. இருப்பினும் ஏழு முதல் பத்து நாட்களுக்குள் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மற்ற பயிர்களைப் போல நோய் தொற்று இருப்பதில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் இதனை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். ஒரு ஏக்கர் நில பரப்பில் 800 முதல்900 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பிற பயிர்களைப் போல பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பறவைகள் மற்றும் கால்நடைகள் அதிகம் விரும்பி உண்பதில்லை. தற்போது விவசாயிகள் அதிக அளவில் எள் சாகுபடி செய்து அதனை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

உதாரணமாக உடன் காய வைத்து அதனை எண்ணெயாக அரைத்து நேரடியாக பொதுமக்களுக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர் .மேலும் ஒரு சிலர் எள்ளுருண்டை, எள்ளு புண்ணாக்கு, எள்ளு பர்பி தயார் செய்து விற்பனை நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.எல்லாவற்றிற்கும் மேலாக எள் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் வருவதில்லை. அமிர்தமே உண்டாலும் அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது. அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்ற பழமொழியை நல்லெண்ணெய் அதிகமாக பயன்படுத்தலாம். தமிழக அரசும் எள் உற்பத்தி அதிகப்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் 5 கிலோ 10 கிலோ மூலம் உதவி வருகின்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: