கரூர் பஸ் நிலையம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

 

கரூர், ஏப்.29: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரிலும், திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கரூர் மாவட்ட திமுக ஏற்பாட்டின் கீழ் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கரூர் பஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற விழாவில், கோடைகால தண்ணீர் பந்தலை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். குடிநீர் பந்தலில் பொதுமக்கள் தாகத்தை தீர்த்திட இளநீர், சர்பத் நுங்கு, மோர் ஆகிய குளிர் பானங்கள் வைக்கப்பட்டிருந்தது.

விழாவில், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் பகுதி திமுக பொறுப்பாளர்கள் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், ஆர் எஸ் ராஜா, ஜோதி பாசு, குமார், மாநகர துணைச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன், கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் , வி கே வேலுச்சாமி, கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, மண்டல தலைவர்கள் அன்பரசன், வெங்கமேடு சக்திவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சாவி நல்லுசாமி, அமர்ஜோதி பாலாஜி, தொண்டரணி அமைப்பாளர் ஜிம் பாலாஜி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சாலை ரமேஷ், மாநகர இளைஞரணி செயலாளர் அருள்முருகன், தகவல் தொழில்நுட்பு காஜா நசீர் அகமது, மோகனசுந்தரம், மாநகர நிர்வாகிகள் தங்கவேல், அங்கு பசுபதி, கந்தசாமி ,ராஜலிங்கம், ஆர் எஸ் அன்பு ரத்தினம், வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம் ரமேஷ், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட திமுக சார்பில் தினசரி தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் வைப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கரூர் பஸ் நிலையம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: