பெட்டிசன் மேளா பொதுமக்கள் மனுக்கள் மீது நேரடி விசாரணை முகாம்

தர்மபுரி, அக்.30: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு இணைந்து பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை முகாம் (பெட்டிசன் மேளா) நேற்று நடந்தது. முகாமில், பொதுமக்கள் வழங்கிய 50க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி புஷ்பராஜ், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயராகவன் மற்றும் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து இது போன்ற முகாம்கள் நடத்தப்படும் எனவும் போலீசார் தெரவித்தனர்.

Related Stories: