30 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம்

காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியனில் உள்ள 30 பஞ்சாயத்துகளில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பெரியாம்பட்டி முதல் நிலை பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்திற்கு, பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, பி.டி.ஓ.,க்கள் ரவி, கலைவாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், துணை தலைவர் கல்பனா சங்கர், செயலாளர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காளப்பனஅள்ளி, பைசுஅள்ளி, கோவிலூர், பூமாண்டள்ளி, மகேந்திரமங்கலம் உட்பட பல்வேறு பஞ்சாயத்துகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தண்ணீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்கள் நந்தினி பிரியா செந்தில் குமார், மகேந்திரன், தமிழ்ச்செல்வி நந்தி சிவம், கவிதா நாகராஜன், குமார் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலாளர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: