பாரம்பரிய உள்ளூர் ரக விதை கண்காட்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், உயர்தர உள்ளூர் விதை ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று (24ம் தேதி) நடக்கிறது. தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, விவசாயிகளுக்கு தேவையான, விரும்பத்தக்க குணங்களுடைய பாரம்பரியம் மிக்க பல்வேறு உள்ளூர் விதை ரகங்களை கண்டறிந்து, ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால், தர்மபுரி மாவட்ட பகுதிக்கு ஏற்ற விதை ரகங்களை உருவாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, உயர் தர விதை ரகங்களை காட்சிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: