பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி நகரில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். தினந்தோறும் 3 டன் வெண் பட்டுக்கூடுகள் வரத்து உள்ளது.

இந்நிலையில் நேற்று 72 விவசாயிகள் 5 ஆயிரத்து 585 பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ வெண்பட்டு அதிகபட்சம் ரூ.645க்கும், குறைந்தபட்சம் ரூ.414க்கும், சராசரியாக ரூ.526க்கும் ஏலம் போனது. இதன் மூலம் ரூ.29,42,842க்கு பரிவர்த்தனை நடந்தது. ஏல அங்காடிக்கு ரூ.44 ஆயிரத்து 142 வருவாய் கிடைத்தது.

Related Stories: