பெண்ணை தாக்கிய அண்ணன், தம்பி கைது

காரிமங்கலம், மார்ச் 23: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சாயத்து சொரக்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஜோதி(32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன்கள் பழனி(50), முருகேசன்(45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதி வீட்டின் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த பழனி மற்றும் முருகேசன் ஆகியோர் ஜோதியை தகாத வார்த்தையால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி மற்றும் முருகேசனை கைது செய்தனர்.

Related Stories: