தர்மபுரி, அக்.23:தர்மபுரி மாவட்டத்திற்கு ஓசூர், பெங்களூரு, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால், வெங்காய மகசூல் குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், கடந்த 2 நாட்களாக கிலோ ₹100க்கு விற்பனையாகிறது. உழவர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹90க்கும், சின்ன வெங்காயம் ₹75க்கும் விற்பனையாகிறது. இது குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு தினமும் 15 டன் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.