25 சதவீத இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு சிஇஓ தகவல்

தர்மபுரி, அக்.1: தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இடங்களுக்கு, சேர்க்கை வேண்டி இணையதளம் மூலம் கடந்த 27.08.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று (1ம் தேதி) அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இணையதளம் மூலமாக, சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள், இன்றைய தேதியில் சார்ந்த பள்ளிகளில் நடைபெற உள்ள குலுக்கலில் விண்ணப்ப நகல் மற்றும் பிறப்புச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்திருப்பின் அதற்கான அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: