ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலம் மீட்பு

பொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.  பொள்ளாச்சி பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தில், நகராட்சிக்குட்பட்ட பூங்கா நிலம் உள்ளது. இந்த பூங்கா நிலத்தில், ஒரு நபர் ஆக்கிரமித்து விளையாட்டு அரங்கம் அமைத்துள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள், அந்த இடத்தை சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நகராட்சி பூங்கா இடம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 27 சென்ட் பரப்பளவு கொண்ட பூங்கா நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், நகராட்சி பூங்கா நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், அந்த நிலத்தில், நகராட்சி சுகாதார பிரிவு மண்டல அலுவலகம் அமைத்து, மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>