கொரோனா வைரஸ் பீதி முட்டல் வனப்பகுதியில் படகு சவாரி நிறுத்தம்

ஆத்தூர், மார்ச் 18: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முட்டல் வனப்பகுதியில், அருவிக்கு செல்ல தடை விதித்தும், படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் கிராமத்துக்கு உட்பட்ட முட்டல் வனப்பகுதியில், வனத்துறையின் பராமரிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரியில் படகுசவாரி, ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக அரசின் உத்தரவின்படி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை முட்டலில்லுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரும் 31ம் தேதி வரை முட்டல் வனப்பகுதிக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: