கோடை வெயிலால் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, மார்ச் 17:  தர்மபுரி நகரில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. சாலையில் செல்லும் போது அனல் காற்று வீசுவதால், கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் தர்பூசணி சாப்பிட்டு, ஓரளவிற்கு வெயிலின் வெப்பத்தை தணித்து கொள்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் இருந்து தர்மபுரி நகருக்கு தர்பூசணி பழங்கள் தினமும் 10 டன் அளவிற்கு விற்பனைக்கு வருகின்றன. தர்மபுரி நகரில் நான்குரோடு, சந்தைபேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் மூலம் ஒரு கிலோ ₹10 முதல் ₹15 வரை தரத்திற்கேற்ப தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: