தர்மபுரியில் காலிபிளவர் விற்பனை ஜோர்

தர்மபுரி, மார்ச் 13: தமிழகத்தில் காய்கறி சாகுபடியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆங்கில காய்கறியான முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளில், பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக காலிபிளவர் அதிகமாக வரத்து தொடங்கியுள்ளது. நுகர்வோர் காலிபிளவரை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தர்மபுரி தினசரி சந்தையில் ஒரு காலிபிளவர் ₹10 முதல் ₹20 வரை விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலிபிளவர் ஒரு டன் முதல் 2 டன் வரை விற்பனையாகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: