விலை வீழ்ச்சியடைந்ததால் தோட்டத்திலேயே வீணாகும் தக்காளி

கடத்தூர், மார்ச் 13: கடத்தூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விவசாயிகள் விட்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கடத்தூர், நத்தமேடு பில்பருத்தி, சுங்கிரஅள்ளி, ராமியணஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 500 ஏக்கா் பரப்பளவில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் ₹150க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, தற்போது ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல், தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதும், தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர். இதனால் தக்காளி பழங்கள் தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: