காரிமங்கலம், மார்ச் 13: காரிமங்கலம் பகுதியில் முள்ளங்கி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காரிமங்கலம் அடுத்த சின்னமிட்டஅள்ளி, பெரியமிட்டஅள்ளி, திண்டல், மணிக்கட்டியூர், எலுமிச்சினஅள்ளி, முதலிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில், முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக முள்ளங்கி 1 கிலோ ₹2 முதல் ₹4 வரை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முள்ளங்கி 1 கிலோ ₹2க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.