காரிமங்கலம், மார்ச் 13: காரிமங்கலத்தில் ஒரே சாலையில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் செல்லும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளால், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.