தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 11: தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில், கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில், கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சுமதி கலந்துகொண்டு கூட்டத்தினை தொடங்கி வைத்தார். சோலைக்கொட்டாய் பகுதி மருத்துவ அலுவலர் தேவி கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விளக்கி கூறினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், செவிலியர் விஜயலட்சுமி, கிராம சுகாதார செவிலியர் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு, கொரோன வைரஸ் காய்ச்சல் குறித்த நோயின் அறிகுறிகள், பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள், சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு வழங்கினர்.

நிகழ்ச்சியில் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் காய்ச்சல் சார்ந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழ்செல்வன் ஒருங்கிணைத்தார். இந்த விழிப்புணர்வு கூட்டம், இன்று 11ம் தேதி 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்றும் நாளை 12ம் தேதி 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதன் மூலம் மாணவர்கள், அவர்கள் பெற்றோர்கள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

Related Stories: