காரிமங்கலம் அருகே இறைச்சி கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

காரிமங்கலம், மார்ச் 11: காரிமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் இருபுறமும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் போன்றவை உள்ளது. இப்பகுதியில் சில்லி சிக்கன் மற்றும் மீன் கடைகள் உள்ளது. சில்லி சிக்கன் மற்றும் மீன் கடைகளில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளை, நாள்தோறும் வெள்ளிச்சந்தை - ஓசூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழே கொட்டி வருகின்றனர். இதேபோன்று ஹோட்டல் கழிவுகள், காலாவதியான மருந்துகள், கட்டிட கழிவுகள் போன்றவையும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பாலத்தின் இருபுறமும் மலைபோல் குவிந்திருக்கும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்கக் கோரி, பலமுறை பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொடுட்வதை தடுக்க விழிப்புணர்வு பலகைகள் அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: