நக்சலைட் காளிதாஸ் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரியில், நக்சலைட் காளிதாஸ் வழக்கு விசாரணையை, வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். சிவகங்கை மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் காளிதாஸ் (56). நக்சலைட்டான இவர் மீது தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம், காரிமங்கலம், பாலக்கோடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரசுக்கு எதிராக சதி திட்டம் செய்தல், துண்டுபிரசுரம் விநியோகம் செய்தல், நக்சல் அமைப்புகளுக்கு ஆயுத பயிற்சி அளித்தல் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தர்மபுரி, பாலக்கோடு நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2, தர்மபுரி முதன்மை சார்பு நீதிமன்றம், பாலக்கோடு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திருச்சி சிறையில் இருந்து நக்சலைட் காளிதாஸ் அழைத்து வரப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம், திருச்சி சிறையில் இருக்கும் நக்சலைட் காளிதாசுடன், வழக்கு தொடர்பாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: