மோளையானூரில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் தொடக்கம்

தர்மபுரி, மார்ச் 10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் பொன்னியம்மாள் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், பொன்னியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவருமான பழனியப்பன் தலைமை வகித்தார். கரூர் அன்பழகன், முன்னாள் பால்வள பெருந்தலைவர் ராஜேந்திரன், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னியம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் எழில் மறவன் வரவேற்றார்.

கரூர் சாந்தி அன்பழகன், அறக்கட்டளை இயக்குநர் ரோஜா பழனியப்பன், வெங்கடசமுத்திரம் கவிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதனை தொடர்ந்து முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் வெங்கடேசன், முதுகலை ஆசிரியர் பூபதி, ஆசிரிய பயிற்றுநர்கள் சீனிவாசன், சஞ்சீவன், மற்றும் பலர் கலந்து கொண்டு, டிஎன்பிஎஸ்.சி தேர்விற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து விளக்கினர். தமிழ்மணி நன்றி கூறினார்.

Related Stories: