மாரண்டஅள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகாரிகள் திடீர் ஆய்வு

பாலக்கோடு, மார்ச் 2: மாரண்டஅள்ளி பகுதியில் செயல்படும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட மளிகை கடைகள், தேநீர் கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் பள்ளிகளின் அருகாமையில் உள்ள பெட்டிக் கடைகள் ஆகியவற்றில் தடைசெய்யப்பட்ட, புகையிலை உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது.  இதையடுத்து, மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில், அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வின் போது, சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மாரண்டஅள்ளி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: