பைசுஅள்ளியில் டேலென்ட் ஷோ 2020

தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரி அருகே பைசுஅள்ளியில் டேலென்ட் ஷோ 2020 என்ற தனிதிறன் போட்டிகள் இன்று(1ம் தேதி) நடக்கிறது. தர்மபுரி  மிட்டவுன் ரோட்டரி கிளப் சார்பில் டேலன்ட் ஷோ 2020 எனும் 5வது மாவட்ட  அளவிலான தனித்திறன் போட்டிகள், பைசுஅள்ளி சங்கமித்ரா திருமண மண்டபத்தில் இன்று(1ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்குகிறது. பிரிகேஜி முதல்  எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு ரைம்ஸ் போட்டி, பேன்சி டிரெஸ் போட்டி,  கலரிங் போட்டி, 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிராயிங்,  ஹேன்ட் ரைட்டிங், ஆர்ட் அன்டு கிராப்ட், அபாகஸ், கிளாஸிக்கல் சிங்கிங்,  டான்ஸ், டிரம்ஸ், கீபோர்டு, வெஸ்டர்ன் டான்ஸ், யோகா உள்ளிட்ட போட்டிகள்  நடக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.

Related Stories: