பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு

பென்னாகரம், பிப்.26:  பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில், தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை காலங்களில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சிகள், விபத்து காலங்களில் உயிரிழப்பை தடுப்பது தொடர்பாகவும், மாரடைப்பு, பக்கவாதம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ்குமார், சிறுநீரக பிரிவு டாக்டர் விவேக் பிரவின், பொது மருத்துவர் பாலசுப்பிரமணியன், எலும்பு முறிவு மருத்துவர்கள் சிவகுமார் செந்தில் முருகன், அருண்பிரகாஷ், மயக்கவியல் நிபுணர்கள் அரவிந்த் பெருமாள், மெளரி ரஞ்சித் ஆகியோர் விபத்து மற்றும் அவசர காலங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதையடுத்து மருத்துவமனையில் புதிதாக கேன்சர் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் பென்னாகரம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கனிமொழி, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: